ஆக்சிஜன் படுக்கை வேண்டுமா? ஆன்லைனில் ரிசர்வ் செய்யலாம்!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை தேவைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை முன் வரிசையில் நிற்கும் காட்சியை பார்த்து வரும் நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது

https://ucc.uhcitp.in/publicbedrequest என்ற இணையதளத்திற்கு சென்று ஆக்சிஜன் படுக்கை மற்றும் சாதாரண படுக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது