ஆக்சிஜன் எங்கே? தடுப்பூசி எங்கே? மோடி எங்கே? ராகுல்காந்தி டுவிட்

நாட்டில் தடுப்பூசி இல்லை ஆக்சிஜன் இல்லை அதே போல் மோடியும் காணவில்லை என பிரதமர் மோடியை கிண்டலடித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா முதல் அலை போன்று இரண்டாவது அலையைத் சரியாக மத்திய அரசு கையாளவில்லை என கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்யவில்லை என்றும் மருந்துகள் ஏற்பாடு செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது

இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை, பிரதமர் மோடியையும் காணவில்லை என்றும், அவர் விஸ்டா கட்டிடத்தில் மட்டுமே பிசியாக இருக்கிறார் என்று பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது