shadow

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் என்ற நகரில் ஆக்சிஜன் இல்லாததால் 19 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒவ்வொரு நாளும் 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் தங்களுக்கு 90 ஆக்சிஜன் சிலிண்டர் மட்டுமே கிடைப்பதாகவும் உயிரிழந்த மருத்துவமனையின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்

ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை உத்தரப்பிரதேச மாநிலத்தில் இல்லை என சமீபத்தில் அம்மாநில முதல்வர் பேட்டி அளித்து இருந்தார் என்பதும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply