‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை

‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை

கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திகில் படமான ‘ஆகாஷ கங்கா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பாகுபலி புகழ் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய வினயன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் விக்ரம் நடித்த ‘காசி’ மற்றும் ‘என் மன வானில்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் சித்திக், ஆசிப் அலி, ஸ்ரீநாத் பாசி, விஷ்ணு கோவிந்த், விஷ்ணு வினய், உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.