ஆகஸ்ட் 15ல் மீண்டும் இணையும் பிரபாஸ்-எஸ்.எஸ்.ராஜமெளலி
‘பாகுபலி’ படத்தின் ஹீரோவாக நடித்த பிரபாஸ் நடித்த அடுத்த படமான ‘சாஹோ’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் பாகுபலி பட இயக்குனரின் அடுத்த படமான ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் முதல்முறையாக இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் அலியா பட், அஜய்தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இரண்டு இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் கதையான இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை 30ல் பத்து மொழிகளில் வெளியாகயுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.