ஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறாரா சசிகலா?

ஈபிஎஸ் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்றார். அவரது தண்டனை காலம் அடுத்த ஆண்டு தான் முடியும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவர் தனது டுவிட்டரில் ஆக.14 ஆம் தேதி சசிகலா விடுதலை என பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சசிகலா வெளியே வந்தாலும் ஈபிஎஸ் முதல்வர் பதவிக்கு ஆபத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில பாஜகவினர் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.