அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படத்தின் அப்டேட்.!!!

அஸ்வின் நடிப்பில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .

தற்போது இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.