அலுவலக கேண்டீனில் சாப்பிடுவது ஆபத்தா?

அலுவலக கேண்டீனில் சாப்பிடுவது ஆபத்தா?

நீங்கள் சாப்பிடும் போது; “இங்கு சாப்பாடு சாப்பிட்டாலே வயிறு உப்பிஷமாக இருக்கு, என்னத்த கலக்குறாங்களோ தெரியல என்று” உங்கள் உடன் பணிபுரிபவர்கள், சொல்ல கேட்டீருப்பீர்கள். அவர்கள் சொல்வதைப்போல் அலுவலக கேண்டீன் உணவுகளில் சோடா உப்பு என்று அழைக்கப்படும் சோடியம் சேர்க்கப்பட்டிருக்கும். இதேபோல் அஜினோமோட்டோ மற்றும் ரீபைண்டு ஆயில்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே அலுவலக கேண்டீன்களில் தினசரி சாப்பிட்டால், உங்களுக்கு புட் பாய்சன் ஏற்படும் அபாயம் உள்ளது. உணவு நஞ்சாக மாறுவது மட்டுமல்லாமல், உணவு அழற்சி ஏற்படும் அபாயங்களும் உள்ளது.

சுகாதாரமற்ற உணவுகளை தினசரி நீங்கள் எடுத்துக்கொண்டால், புற்றுநோய் உள்பட பல்வேறு அபாயகரமான நோய்கள் வரவும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

இது தொடர்பாக அமெரிக்காவில் அலுவலகத்தில் தினசரி அல்ல்து வாரம் ஒரு முறை அல்லது சாப்பிடும் 5000 ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஒரு வாரத்தில் மட்டும் 1300 கலோரிகள் கிடைத்துள்ளது. இதில் திட கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு 70 சதவீதம் இருந்துள்ளது. இந்த உணவுகள் பெரும்பாலும் அவர்களது அலுவலகத்தில் இலவசமாக கிடைத்தவை.

எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், இலவசமாக கிடைக்கிறது என்று எண்ணி, அலுவலகத்தில் வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் அலுவலகத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதனிடையயே நிறுவனங்கள், ஆரோக்கியமான உணவுகளை தங்களது ஊழியர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.