அலங்கார பூ குவளையில் தங்கம் கடத்திய மதுரை வாலிபர்!

துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் அலங்கார பூ குவளையில் நூதன முறையில் தங்கம் கடத்திய வாலிபர் மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினரிடம் சிக்கினார்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் நேற்று துபாயில் இருந்து மதுரை வந்தார். அவர் கொண்டு வந்திருந்த அலங்கார பூ குவளையின் மீது சந்தேகம் அடைந்த மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் அதனை சோதனை செய்தனர்.

இந்த சோதனை அவர் அலங்கார பூ குவளையில் தங்கம் கடத்தி வந்ததும், அதில் 150கிராம் தங்க பவுடர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதனையடுத்து ஸ்டீபனிடன் விசாரணை நடந்து வருகிறது

Leave a Reply