அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

தன் மீதான சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிதா வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

Leave a Reply