அரை நிர்வாணமாக படுத்து கொண்ட அம்மா உடலில் ஓவியம் வரையும் குழந்தைகள்:

நெட்டிசன்கள் கண்டனம்

கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்பவர் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக படுத்து கொண்டிருக்க, அவரது மார்பு உள்பட உடலில் அவரது ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை ஓவியம் வரையும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுகுறித்து கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஹானாவை விசாரணை செய்து வருகின்றனர்.

அம்மாவாக இருந்தாலும் தான் பெற்ற குழந்தைகளை இதற்கா பயன்படுத்துவது என ரெஹாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இந்த ரெஹானா பாத்திமா தான் சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று ஆவேசமாக போராட்டம் செய்தவர் என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.