அருவி இயக்குனருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

அருவி இயக்குனருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

கடந்த வாரம் வெளியான புதுமுகம் அதிதிபாலனின் ‘அருவி’ திரைப்படம் குறித்து பேசாத ஆட்களே ரொம்ப குறைவு. ஒரு திரைப்படம் அனைத்து தரப்பினர்களையும் (விஜய் ரசிகர்களை தவிர) கவர்ந்தது என்பதே மிகப்பெரிய ஆச்சரியம்தான்

இந்த நிலையில் அருவி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பாரத்து இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் அருண்பிரபு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு. ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ‘அருவி’ படத்தை இயக்குனர் ஷங்கர், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ரவி உள்பட பல கோலிவுட் பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply