அருண்விஜய்யின் ‘மாஃபியா’வில் இணைந்த முன்னணி நடிகை

லைகா நிறுவனம் தயாரித்து வரும் படங்களில் ஒன்றான படத்திற்கு ‘மாஃபியா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கும் இந்த திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் ஆகும்.

இந்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அருண்விஜய் ஜோடியாக முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார்

மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றி பிரசன்னா நடிக்கவுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகிறது

அருண்விஜய், லைகா, மாஃபியா, ஃபர்ஸ்ட்லுக்

Leave a Reply