அரியர் தேர்வுகளை எழுத அண்ணா பல்கலை தரும் கடைசி வாய்ப்பு

பல வருடங்களாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு 3 கடைசி வாய்ப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

நீண்ட வருடங்களாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத 3 வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி, 2021 ஆகஸ்ட்/ செப்டம்பர், 2022 பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பருவத் தேர்வுகளோடு சிறப்பு அரியர் தேர்வும் நடத்தப்படும்.

இந்த 3 இறுதி வாய்ப்புகளை பயன்படுத்தி அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம். தேர்வு குறித்த முழு விவரம் பின்னர் வெளியிடப்படும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, முதுநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களின் அரியர் தேர்வுக்கான கால அட்டவணையையும் அண்ணா பல்கலைக் கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply