அரபிக்கடலில் உருவானது ‘கியார்’ புயல்: மீண்டும் கேரளாவுக்கு ஆபத்தா?

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தற்போது அரபிக்கடலில் புயல் கிளம்பியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியதாகவும், புதிதாக உருவாகியுள்ள புயலுக்கு கியார் (KYAAR) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

இந்த கியார் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதால் கேரளா மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது

Leave a Reply