அரசை விமர்சனம் செய்த கல்லூரி மாணவர் அடித்து கொலை: அதிர்ச்சி தகவல்

அரசை விமர்சனம் செய்த கல்லூரி மாணவர் அடித்து கொலை: அதிர்ச்சி தகவல்

அரசை விமர்சனம் செய்து சமூகவலைதளத்தில் கருத்து வெளியிட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு கொடூர சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது

வங்கதேசத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் அப்ரார் ஃபாஹட்டின் என்பவர் கடுமையான காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அவரது கொலை குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை செய்து வந்தபோது சமூக வலைத்தளத்தில் அவர் அரசை கடுமையாக விமர்சனம் செய்தது தெரிய வந்துள்ளது

இதனையடுத்து அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்த மர்ம நபர்கள் அப்ரார் ஃபாஹட்டினை சுமார் நான்கு மணி நேரம் கொடூரமாக தாக்கியதாகவும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து அவர் உயிரிழந்ததாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் இசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.