அரசு வாகனங்களுக்கு தான் ‘G’ ஸ்டிக்கர்

g-stikker-521x381

அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த முறையில் இயக்கப்படும் வாகனங்களில் ‘ஜி’ ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசு வாகனங்களில் ‘ஜி’ என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்படுவது வழக்கம்.

g-stikker-521x381
g-stikker-521×381

அரசு வாகனங்கள் மட்டுமல்லாமல் சில தனியார் வாகனங்களும் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

ஒப்பந்த வாகனங்களும் ‘ஜி’ ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாகவும், அதன்மூலம் முறைகேடான செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.