அரசு பள்ளிகளில் அபாகஸ். அமைச்சர் செங்கோட்டையனின் புதிய அறிவிப்பு

அரசு பள்ளிகளில் அபாகஸ். அமைச்சர் செங்கோட்டையனின் புதிய அறிவிப்பு

தமிழக அரசின் பள்ளிகளில் விரைவில் அபாகஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

பழங்கால கல்வி முறையான அபாகஸ் முறையை தற்போது ஒருசில தனியார் பள்ளிகளில் பயிற்சியளித்து வருகின்றனர். இந்த முறைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவர்களின் ஐக்யூ என்று கூறப்படும் அறிவுத்திறன் இதனால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தனியார் பள்ளிகளை போலவே அரசு பள்ளிகளிலும் அபாகஸ் கல்விமுறை அறிமுகம் செய்யப்படும் என்றும் இதுகுறித்த ஆலோசனை தொடங்கிவிட்டதாகவும் வரும் டிசம்பர் முதல் அனைத்து தமிழக அரசு பள்ளிகளிலும் அபாகஸ் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.