அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்று கடைசி தினம்!

தமிழகத்திலுள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி தினம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளதை அடுத்து மாணவர்கள் விறுவிறுப்பாக விண்ணப்பம் செய்து வருகின்றனர்

www.tngasa.org, www.tngasa.in ஆகிய இரண்டு இணையதளங்களில் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்பதும் இதற்கான விண்ணப்பம் கட்டணம் ரூபாய் 48 இன்றும் பதிவு கட்டணம் ரூபாய் 2 என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது

இந்த நிலையில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி என்பதால் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது