அரசு கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள்: அமைச்சர் அன்பழகன்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மேலும் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்று உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் அன்பழகன் மேற்கண்ட அறிவிப்புகளையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தமிழகத்தில் உள்ள 13 பல்கலை.யில் ஒருவர் மட்டுமே வெளி மாநிலத்தை சேர்ந்தவர், அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா மட்டுமே கர்நாடகாவை சேர்ந்தவர் என பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேச்சு

Leave a Reply