அரசியல்வாதி என்னைவிட சிறந்த நடிகர்கள்: கமல்ஹாசன்

அரசியல் தலைவர்கள் என்னை விட நடிக்கின்றனர் என்றும் அதைக்கண்டு மக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன், இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது என்றும், அரசியல்வாதி என்னைவிட சிறந்த நடிகர்களாக இருப்பதால் அவர்களை பார்த்து மக்கள் ஏமாந்துவிட கூடாது என்றும் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *