அரசின் மிரட்டலுக்கு பணியாமல் தொடரும் போராட்டம்

அரசின் மிரட்டலுக்கு பணியாமல் தொடரும் போராட்டம்

வேலைநிறுத்த போராட்டம் செய்து வரும் ஆசிரியர்கள் உள்பட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் இன்றுக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தும் இன்றும் 7வது நாளாக பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாமக்கல், திருவள்ளூர், கோவை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது.

இந்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு வருவாயில் 71 சதவீத பணம் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு செலவாகிறது என்றும், 29 சதவீத தொகை தான் மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்படுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply