அயோத்தி பாதுகாப்பில் இருந்த 5 போலீசார் சஸ்பெண்ட்

அயோத்தி பாதுகாப்பில் இருந்த 5 போலீசார் சஸ்பெண்ட்

அயோத்தி வழக்கு குறித்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் தீர்ப்பையொட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பில் இருந்த ஐந்து போலீசார், பணி நேரத்தில் வாட்ஸ் அப்-இல் மூழ்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த ஐந்து போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்சிட்டிவ்வான பகுதியில் பாதுகாப்பில் இருந்தபோது வாட்ஸ் அப் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது

Leave a Reply