அயோத்தி இந்துக்களுக்குத்தான்: ராமர் கோவில் கட்ட அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அயோத்தி இந்துக்களுக்குத்தான்: ராமர் கோவில் கட்ட அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்குத்தான் சொந்தம் என்றும், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கிய தீர்ப்பின் மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்.

* அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.

* 5 ஏக்கர் நிலத்தை வழங்க மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 3 மாதத்தில் இந்த இடம் வழங்கப்பட வேண்டும்

* இஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.

* தீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்

* இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும்.

* சர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்புக்கும் பிரித்து வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல.

* பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

* அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்.

* நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் முடிவு செய்ய முடியாது.

* 1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அந்த சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடை இல்லை.

* அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

* சன்னி வக்போர்டுக்கு எதிராக ஷியா வக்போர்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* ஒருவரின் நம்பிக்கை மற்றவரின் நம்பிக்கையைச் சீர்குலைக்கக் கூடாது.

* தொல்லியல் துறை அறிக்கையை நிராகரிக்க முடியாது.

* நிர்மோகி அகாராவின் வாதம் ஏற்புடையதாக இல்லை.

* காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை.

* அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

* அந்த இடம் பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் வாதம்.

* பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.

* ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.

* நடுநிலையைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது

Leave a Reply