அம்மா, அப்பா உள்பட 5 குடும்ப உறுப்பினர்களை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது அம்மா, அப்பா உள்பட குடும்பத்தை சேர்ந்த 5 பேரை சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் அலபாமா அருகே உள்ள எல்க்மான்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் அந்த வீட்டை சேர்ந்த சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்களை சரமாரியாக சுட்டுள்ளான். சிறுவனால் சுடப்பட்ட ஐவரில் மூவர் அதே இடத்தில் இறந்த நிலையில் மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். குடும்பத்தினரை கொன்ற சிறுவன் உடனடியாக தான் கொலை செய்த தகவலை காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டான்.

இதுகுறித்த போலீஸ் விசாரணையில், கொல்லப்பட்டது 38 வயது ஜான் சிஸ்க், 35 வயது மேரி சிஸ்க், சிறுவனின் 6 வயது தம்பி, 5 வயது தங்கை, 6 மாத தம்பி ஆகியோர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *