அம்மன் கோயில் கருவறைக்குள் டிக்டாக் வீடியோ: இளைஞர்களுக்கு கண்டனம்

அம்மன் கோயில் கருவறைக்குள் டிக்டாக் வீடியோ: இளைஞர்களுக்கு கண்டனம்

கோவையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கருவறைக்குள் புகுந்து அங்குள்ள அம்மன் கோவில் முன் டிக்டாக் வீடியோ எடுத்த இரண்டு இளைஞர்களுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது

துர்க்கை அம்மன் என்ற கோயிலில் பிரசாத் மற்றும் பிரதீப் ஆகியோர் பூசாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது டிக்டாக் வீடியோக்களை பதிவு செய்து வந்த நிலையில் திடீரென நேற்று அம்மன் முன் காதல் பாடலுக்கு நடனமாடிய டிக் டாக் வீடியோ எடுத்தனர்

அம்மனையே கதாநாயகி போல் வடிவமைத்து இவர்கள் பாடிய இந்த பாடல் டிக்டாக்கில் வைரல் ஆன போதிலும் பெரும்பாலானோர் இதனை கண்டித்துள்ளனர். சக்தி வாய்ந்த அம்மன் முன் இவ்வாறு காதல் பாடலை பாடுவது சரியானது அல்ல என்று அந்த இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கோவில் நிர்வாகம் அந்த இரண்டு இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply