அமைச்சருக்கு வாட்ஸ் அப்-பில் மிரட்டல் விடுத்த இளைஞருக்கு முன்ஜாமின்

அமைச்சருக்கு வாட்ஸ் அப்-பில் மிரட்டல் விடுத்த இளைஞருக்கு முன்ஜாமின்

விஜய் நடித்த சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்திய போது, சட்டத்துறை அமைச்சருக்கு வாட்ஸ் அப்-பில் மிரட்டல் விடுத்த இளைஞருக்கு முன் ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள பட்டாபிராம் என்ற பகுதியை சேர்ந்த, லிங்கதுரை உள்ளிட்ட 3 பேர் வாட்ஸ் அப்பில் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அநத வீடியோவில் தான் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க கோரி லிங்கதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், லிங்கதுரைக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

 

Leave a Reply