அமெரிக்க தமிழ் மாணவிக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம்

அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி ஒருவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை உத்தரவு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அமெரிக்காவில் பிறந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க விரும்பி அதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்ட நிலையில் அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவிக்கு சென்னை இ.எஸ்.ஐ.எஸ் மருத்துவ கல்லூரியில் சேர்க்கை உத்தரவு வழங்க உத்தரவு பிறப்பித்தது

இந்திய குடியுரிமை சான்றை 12 வாரங்களில் அந்த மாணவி தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply