shadow

அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம். வடகொரியாவின் எச்சரிக்கையால் பரபரப்பு
north korea
அண்டை நாடான தென்கொரியாவை மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது சமீபத்தில் ஐ.நா பொருளாதார தடையை விதித்தது. இந்த பொருளாதார தடையால் கடும் ஆத்திரம் அடைந்துள்ள வடகொரியா, அமெரிக்கா மீதும் தென்கொரியா மீது அணுகுண்டுகளை வீசி அந்த இரு நாடுகளையும் சாம்பலாக்கிவிடுவோம் என எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதித்தது மட்டுமின்றி தென்கொரியா-வடகொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவம் இணைந்து போர்ப்பயிற்சியையும் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, “வடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் போர்ப்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால், இரண்டு நாடுகள் மீதும் அணுஆயுத தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம். நாங்கள் அணு ஆயுதங்களை ஏவினால் அமெரிக்காவும் தென்கொரியாவும் சாம்பலாகிவிடும் என்று எச்சரித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க ராணுவ வட்டாரம், ‘வடகொரியாவின் எச்சரிக்கைக்கு பணிய முடியாது என்றும் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிதா  இதுகுறித்து கூறியபோது, ‘வடகொரியா பொறுமை காத்து சர்வதேச ஒத்துழைப்பை கோரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply