அமெரிக்காவின் புகழ் பெற்ற பாப் நட்சத்திரம் மைலி சைரஸ் திருமணம்

அமெரிக்காவின் புகழ் பெற்ற பாப் நட்சத்திரம் மைலி சைரஸ் திருமணம்

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் மைலி சைரஸ் தனது நீண்ட நாள் காதலரான லியாம் ஹெம்ஸ்வொர்த்தை திருமணம் செய்து கொண்டார்.

‘தி லாஸ்ட் சாங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை அவர்கலை 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த மைலி சைரஸ் முதல் பார்வையிலேயே காதல் கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளிக்ல் இருவரும் பல இடங்களில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக்கொண்ட நிலையில் 2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்த நிலையில் இருவரும் மீண்டும் காதல் வானில் சிறகடித்துப் பறந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் உள்ள தனது பங்களாவில் வைத்து மைலி சைரஸ், தன் காதலர் லியாமை மணந்து கொண்டார். இதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

டுவிட்டரில் மைலி சைரஸ் திருமணம் தொடர்பான படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.