அமித்ஷா வருகை சென்னை மக்களுக்கு இடையூறா? சென்னை ஐகோர்ட் கேள்வி

அமித்ஷா வருகை சென்னை மக்களுக்கு இடையூறா? சென்னை ஐகோர்ட் கேள்வி

பாஜக தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பாராளுமன்றதேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன

இதனை கவனித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை அழைத்து விளக்கம் கேட்டார். பொதுமக்களுக்கு இடையூறாக பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற விதியை மீறி பேனர் வைக்கப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி சுட்டி காட்டினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் அரசு வழக்கறிஞர் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார். பல்வேறு இடங்களில் நடைபாதைகளை உடைத்து பாஜக சார்பில் அமித்ஷாவை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply