அமித்ஷா, மோடியை சந்திக்கும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்று சட்டப்பேரவையில் மெஜாரிட்டியையும் நிரூபித்தும் காண்பித்தார்

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக வரும் 5-ஆம் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது

இந்த சந்திப்பை அடுத்து மத்திய அமைச்சர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் நிறைவேற்ற வேண்டிய மாநில அரசின் திட்டங்கள் குறித்து அவர் மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதாகவும், அமித்ஷா மற்றும் மோடியுடன் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து அவர் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply