அமித்ஷா தேன் கூட்டில் கை வைத்து விட்டார்: வைகோ

அமித்ஷா தேன் கூட்டில் கை வைத்து விட்டார்: வைகோ


அமித்ஷா தேன் கூட்டில் கை வைத்து விட்டார் என்றும் இதனை நாங்கள் விடமாட்டோம் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே மொழி என்ற அறிவிப்பை சமீபத்தில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை நாடு முழுவதும் பரப்பி தேசிய மொழியாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தியை கடந்த 50 ஆண்டுகளாக எதிர்த்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுகவும், மதிமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியை தமிழகத்தின் உள்ளே நுழைய விடமாட்டோம் என்று தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே மொழி என்ற கருத்தை கூறி தேன்கூட்டில் கையை வைத்து விட்டார் அமித்ஷா. இதனை நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று வைகோ தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply