அமலாபாலின் ‘ஏ’ படத்தில் பக்தி பாடல் பாடிய சுசீலா
அமலாபால் நடித்த ‘ஆடை’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சாரில் ஏ சர்டிபிகேட் பெற்றது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தில் பாடகி பி.சுசீலா ஒரு பக்திப்பாடலை பாடியுள்ளதாகவும், இந்த பாடல் ஏற்கனவே கடந்த 70 வருடங்களுக்கு முன் அவரே பாடிய பாடல் என்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
அமலாபால், ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார்