அமலாபாலின் இந்த டுவீட்டுக்கும் விஜய்யின் திருமணத்திற்கும் சம்பந்தம் உண்டா?

அமலாபாலின் இந்த டுவீட்டுக்கும் விஜய்யின் திருமணத்திற்கும் சம்பந்தம் உண்டா?

அமலாபாலிடம் இருந்து விவாகரத்து பெற்ற இயக்குனர் விஜய், ஐஸ்வர்யா என்ற டாக்டரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். திருமண வேலைகளை இருவீட்டார்களும் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமலாபால் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘நான் போராடுவேன். வாழ்வேன். பெரிய சிறிய தடைகள் வரட்டும். அதில் இருந்து மீண்டு வந்து ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை நசுக்கி ஊதித் தள்ளுவேன். எனது பலத்தை நான் நம்புகிறேன். சுதந்திரமும் மகிழ்ச்சியும் முக்கியம். தைரியம் இருந்தால் தோல்வி அடைய மாட்டீர்கள். இதுதான் நான். இது எனது ஆடையின் கதை” என்று கூறியுள்ளார்.

மிகச்சரியாக விஜய்யின் திருமண அறிவிப்பு தினத்தன்று அமலாபால் இந்த டுவீட்டை பதிவு செய்ய என்ன காரணம், இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா? என கோலிவுட் திரையுலகினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Leave a Reply