அமமுகவின் அடுத்த விக்கெட்: அடுத்தடுத்து உருளும் தலைகள்

அமமுகவின் அடுத்த விக்கெட்: அடுத்தடுத்து உருளும் தலைகள்

தினகரனின் அமமுகவில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து கொண்டு இருப்பதால் அக்காட்சியின் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்பட பல தலைவர்கள் அமமுகவில் இருந்து விலகி அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார் வேலூர் ஞானசேகரன் என்பவர்.அடுத்தடுத்து அமமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து கொண்டிருப்பதால் திமுக, அதிமுகவின் இன்னொரு வடிவமாக மாறி வருவதாகவும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது

அதே நேரத்தில் தினகரன் அடுத்து கட்சி நடத்த முடியாத அளவிற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர் இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் அமமுகவின் கூடாரம் முற்றிலும் காலியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply