அமமுகவினர் தங்கியிருந்த அறையில் பறக்கும் படையினர் சோதனை!

அமமுகவினர் தங்கியிருந்த அறையில் பறக்கும் படையினர் சோதனை!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்துவிட்டாலும், வரும் 19ஆம் தேதி நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால் இன்னும் தேர்தல் பரபரப்பு அடங்கவில்லை

இந்த நிலையில் மதுரை ஆண்டாள் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றி தேர்தல் பறக்குபடையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அ.ம.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகள் தங்கியிருந்த அறையில் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென சோதனை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply