அப்ப தோல்விக்கு ஜாதவ் காரணம் இல்லையா? சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய போது கேதார் ஜாதவ்வின் ஆமை வேக ஆட்டத்தினால் தான் தோல்வி அடைந்தது என ஒட்டுமொத்த சமூக வலைதள பயனாளிகள் பொங்கி எழுந்தனர்

ஆனால் இன்றைய போட்டியில் கேதார் ஜாதவ் இல்லாமலேயே படுமோசமாக சென்னை அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 170 என்ற இலக்கை சென்னை அணிக்கு கொடுத்த நிலையில் அந்த இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது

இன்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு தவிர வேறு யாருமே சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனதும் சாம் கர்ரன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனதும் துரதிஷ்டமான நிலை ஆகும்

இன்றைய போட்டியிலும் சென்னை அணி தோல்வி அடைந்ததால் 7 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே சென்னை அணி பெற்றுள்ளதால் புள்ளிப் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை, பெங்களூர், ஐபிஎல், ஜாதவ், தோனி,

Leave a Reply

Your email address will not be published.