அப்புறம் என்ன ம….க்கு என் டைம்லைன்ல கமெண்ட் பண்ணுறீங்க? டென்ஷன் ஆன கைதி தயாரிப்பாளர்

அப்புறம் என்ன ம….க்கு என் டைம்லைன்ல கமெண்ட் பண்ணுறீங்க? டென்ஷன் ஆன கைதி தயாரிப்பாளர்

தீபாவளி திருநாளை ஒட்டி நாளை விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டு படங்களுமே வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கைதி திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’கைதி திரைப்படம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொடுக்கும் ஒரு படமாக இருக்கும்’ என்று பதிவு செய்திருந்தார்

இதற்கு ஒரு விஜய் ரசிகர் ’ஒரு எதிர்பார்ப்பும் இல்லை’ என்று கூறி ஒரு மோசமான வார்த்தையையும் பதிவு செய்துள்ளார். இதனால் டென்ஷனான தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவும் அதே மோசமான வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்

டுவிட்டரில் ரசிகர்கள் தரம் தாழ்ந்து பதிவு செய்வது சகஜம்தான். ஆனால் ஒரு தயாரிப்பாளர் இப்படி பதிவு செய்யலாமா? என்று சமூக வலைத்தள பயனாளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.