அப்படியே விட்ருங்க, சாகட்டும்: தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் குறித்து நெட்டிசன்கள்

சென்னை குரோம்பேட்டையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதோடு போராட்டம் செய்து வருகிறார்.

சுஜித்தை சரியான முறையில் மீட்கவில்லை என்று கூறி போராட்டம் நடத்தி வரும் இவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதிக உயரமான செல்போன் டவரில் ஏறி போராடுவதால் குரோம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்தும் நபரை கீழே கொண்டு வர போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுபோன்று கோமாளித்தனமாக போராடும் இளைஞர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் அப்படியே விட்ருங்க, சாகட்டும் என்றும் கருத்து தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply