அனைத்து வேட்பாளர்களுக்கும் அவசர உத்தரவு: காங்கிரஸ் அதிரடி

அனைத்து வேட்பாளர்களுக்கும் அவசர உத்தரவு: காங்கிரஸ் அதிரடி

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் அவசர உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வேட்பாளர்களும் தாங்கள் பெற்ற வாக்குகளை, வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்கும்படி காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 20-ல் அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூன் 7ஆம் தேதிக்குள் இந்த விவரங்கள் வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.