அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர்: கமலுக்கு இந்த டுவீட் தேவையா?

அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர்: கமலுக்கு இந்த டுவீட் தேவையா?

ஆட்சியே மோசம் என்ற நிலையில் அந்த ஆட்சிக்கு யார் தலைமை தாங்கினால் என்ன? என்பதை போல் கடவுளே இல்லை என்று கூறும் பகுத்தறிவாதி கமல்ஹாசனுக்கு எந்த ஜாதியினர் அர்ச்சகர் ஆனால் என்ன? என்ற கேள்வியை டுவிட்டர் பயனாளிகள் கேட்டு வருகின்றனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் சற்றுமுன்னர் தனது டுவிட்டரில், ‘திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்’ என்று பதிவு செய்திருந்தார்.

கமலின் இந்த கருத்துக்கு பதிலளித்து வரும் டுவிட்டர் பயனாளிகள், ‘ஏற்கனவே மாரியம்மன் கோவில்களில் அனைத்து ஜாதியிலும் அர்ச்சர்கள் இருக்கிறார்கள் ் சமூகமும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது் இதிலென்ன புரட்சி? என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாத கமலுக்கு இதில் என்ன அக்கறை’ என்றும், வைக்கம் வீரர் பெரியார் அனைத்து சாதியினர்களும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று கூறினாரா? என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Leave a Reply