அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்!

நடிகை அனுஷ்காவின் நிசப்தம் திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீஸுக்கு தயாராகி விட்ட நிலையிலும் கோவிட் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு, இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்த விமர்சனத்தை பார்ப்போம்

இந்த படத்தின் ஒருவரி கதையை சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மேலும் இந்த படத்தில் இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரில் செயற்கைத்தனமான காட்சிகள் உள்ளதால் அனுஷ்கா உள்பட அனைவருமே செயற்கைத்தனமாக நடித்துள்ளனர்

எந்த ஒரு காட்சியிலும் நம்பகத்தன்மை இல்லை என்பது பெரும் சோகம். மேலும் நடிப்பிலும் யாரும் சிரத்தையாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை

அதேபோல் மாதவனின் சிறப்பு தோற்றமும் படத்திற்கு எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை. வெளிநாட்டு நடிகர்கள் முற்றிலுமாக படத்திற்கு அந்யோன்யமாக இருப்பதால் அவர்களின் நடிப்பு ரசிக்க முடியவில்லை
குறிப்பாக திரைக்கதையில் கொஞ்சம் கூட விறுவிறுப்பு இல்லை என்பது பெரும் சோகமான. இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரில் செய்யும் கூத்துக்களும் ரொமான்ஸ் காட்சிகளும் கொஞ்சம் கூட பார்வையாளர்களை கவரும் வகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சலி இந்த படத்தில் எதற்காக நடித்தார் என்பது தெரியவில்லை. அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அனுஷ்கா ஒரு சில காட்சிகளில் ரசிகர்களை திருப்திபடுத்தினாலும் மொத்தத்தில் அவரது வழக்கமான நடிப்பை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது

மொத்தத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது என்பதை உண்மை. மொத்தத்தில் ஓட்டிகள் ரிலீஸ் ஆகும் படங்கள் என்றாலே மொக்கை தான் என்ற உண்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.