shadow

அனிருத்தின் ‘புதுசாட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனிருத் உள்பட மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் திரைப்படம் தும்ப. இந்த படத்தை ஹரிஷ் ராம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘புதுசாட்டம்’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தர்ஷன், கீர்த்தி பாண்டியன், கலக்கு போவுது யாரு புகழ் தீனா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைக்கின்றனர். இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *