அந்த 4 பேர் எப்போது சிக்குவார்கள்? டாக்டர் ராம்தாஸ் கேள்வி!

அந்த 4 பேர் எப்போது சிக்குவார்கள்? டாக்டர் ராம்தாஸ் கேள்வி!

ஒரு கட்சியிலிருந்துகொண்டு இன்னொரு கட்சியில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற்ற அந்த 4 பேர் எப்போது சிக்கப் போகிறார்களோ? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில், ‘ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு: செய்தி இந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர். மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து கொண்டு இன்னொரு கட்சியில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற்ற அந்த 4 பேர் எப்போது சிக்கப் போகிறார்களோ? என கூறியுள்ளார்.

முன்னதாக சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுபடி ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திமுக, அதிமுக, அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.