அந்த பயம் இருக்கட்டும்: பெரியார் என்றால் சும்மாவா? முக ஸ்டாலின் டுவீட்

இன்று பெரியாரின் நினைவு தினத்தை அடுத்து தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு டுவிட் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த டுவீட்டுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அந்த டுவீட்டை பாஜக நீக்கிவிட்டது

இந்த நிலையில் இதுகுறித்து முக ஸ்டாலின் தனது டுவிட்டரில், ’பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?

அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply