அத்வானி-வைகோ திடீர் சந்திப்பு!

அத்வானி-வைகோ திடீர் சந்திப்பு!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றுள்ள நிலையில் அவரை டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பாஜக பிரமுகரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி சந்தித்து பேசினார். வைகோ, சுவாமி ஆகிய இருவரும் இரு துருவங்களாக இருந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இதுகுறித்து தனது சந்தோஷத்தை சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மூத்த பாஜக தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான அத்வானி அவர்களை சந்தித்தார் இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.  மேலும் இந்த சந்திப்பின்போது வைகோவும் குடும்பத்தினர்களும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply