அத்தி வரதரை தரிசனம் செய்த ஓபிஎஸ்

காஞ்சிபுரம் அத்திவரதரை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கிய அத்திவரதர் வைபவம், இன்றுடன் 31-வது நாளாக தொடர்ந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருள் பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதனிடையே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு இன்று வருகை தந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அத்திவரதரை தரிசித்தார்.

அப்போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சால்வை மற்றும் மாலைகளை ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அணிவிக்கப்பட்டது. அவருடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply