அத்திவரதர் தரிசனம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்கப்படுமா?

அத்திவரதர் தரிசனம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்கப்படுமா?

அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில் மீண்டும் அவரை குளத்தில் வரும் 16ஆம் தேதி வைக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது

இந்த நிலையில் அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்க தயார் என சென்னை உயர்நிதிமன்றம் தெரிவித்துள்ளதால் இன்று அல்லது நாளை மனுதாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனுவின் விசாரணையில் மேலும் 48 நாட்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply