அத்திவரதர் கோவிலில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதை

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த வைபவ நிகழ்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் வெளி மாவட்டம் மற்றும் மற்ற மாநில பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். 45வது நாளான இன்று அத்திவரதருக்கு பன்னீர் ரோஜா திற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டுள்ளது. இன்று ஒரேநாளில் நண்பகல் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் லட்சக் கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினி தனது மனைவி லதாவுடன் அத்திவரதர் தரிசம் பெற வந்துள்ளார்.அவரது சார்பில் சுவாமிக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது. அத்துடன் கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பிரசாதங்களும், அத்தி வரதர் புகைப்படமும் வழங்கப்பட்டது.

அத்திவரதர் வைபவம் இன்னும் 2 நாட்களே நடைபெறவுள்ளது. வரும் 17ம் தேதி அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply